தமிழக செய்திகள்

பெண்கள் குறித்து சர்ச்சை கருத்து: எச்.ராஜா மீதான வழக்கை ரத்து செய்ய ஐகோர்ட்டு மறுப்பு

தனக்கு எதிரான வழக்கை ரத்து செய்யக்கோரி சென்னை ஐகோர்ட்டில் எச்.ராஜா மனு தாக்கல் செய்து இருந்தார்.

தினத்தந்தி

சென்னை,

பா.ஜனதா மூத்த தலைவர் எச்.ராஜா தனது சமூக வலைத்தளமான பக்கத்தில் கடந்த 2018-ம் ஆண்டு பெண்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கருத்துக்களை பதிவிட்டதாக ஈரேடு பேலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கு ஈரேடு கேர்ட்டில் இருந்து, சென்னையில் உள்ள எம்.பி., எம்.எல்.ஏ.க்களுக்கு எதிரான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு கேர்ட்டுக்கு மாற்றப்பட்டது.

இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி சென்னை ஐகேர்ட்டில், எச்.ராஜா மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை தள்ளுபடி செய்த சென்னை ஐகேர்ட்டு, எச்.ராஜா மீதான வழக்கை 3 மாதங்களுக்குள் விசாரித்து முடிக்க சிறப்பு கேர்ட்டுக்கு உத்தரவிட்டது.

இந்த நிலையில், இந்த வழக்கை ரத்து செய்யக்கேரி மீண்டும் சென்னை ஐகேர்ட்டில் எச்.ராஜா மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன், சர்ச்சைக்குரிய கருத்தை சமூக வலைதளத்தில் பதிவிட்டது எச்.ராஜாதானா? என்று கேள்வி எழுப்பினார். அதற்கு எச்.ராஜா தரப்பில் ஆம் என்று பதில் அளிக்கப்பட்டது. இதையடுத்து, வழக்கை ரத்து செய்ய மறுத்த நீதிபதி, சிறப்பு கேர்ட்டில் நடைபெறும் விசாரணையை எதிர்க்கெள்ளும்படி உத்தரவிட்டு, மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு