சென்னை,
சென்னை போரூரில் உள்ள தனியார் ஓட்டலில் குறும்படம் எடுப்பதற்காக 5 இளம்பெண்கள் மற்றும் 4 இளைஞர்கள் அனுமதி பெற்று, அதற்கான பணிகளை மேற்கொண்டிருந்தனர். அவர்கள் ஜெனரேட்டர் அறை அருகே நின்று குறும்படத்திற்கான பணிகளை மேற்கொண்டு வந்ததாக தெரிகிறது.
அப்போது திடீரென ஜெனரேட்டரில் இருந்து கரும்புகை வெளியாகி உள்ளது. இதனை சுவாசித்த 9 பேரும் மூச்சுத்திணறி மயக்கமடைந்தனர். இதையடுத்து ஓட்டல் ஊழியர்கள் மயங்கிய நிலையில் இருந்த ஸ்வேதா, பவித்ரா, காவியா, ரேவதி, நிவேதா, காமராஜ், சாமிநாதன், இளவரசன் மற்றும் லோகேஷ் ஆகிய 9 பேரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர்.