தமிழக செய்திகள்

திருவொற்றியூரில் மின்சாரம் தாக்கி சமையல்காரர் பலி

திருவொற்றியூரில் மின்சாரம் தாக்கி சமையல்காரர் பரிதாபமாக இறந்தார்.

தினத்தந்தி

திருவொற்றியூர் எஸ்.பி.கோவில் 1-வது தெருவைச் சேர்ந்தவர் பாபு (வயது 49). சமையல்காரரான இவர், நேற்று முன்தினம் மாலை தனது வீட்டின் இரும்பு கட்டிலில் துணிக்கு இஸ்திரி போட்டு கொண்டு இருந்தார். அப்போது திடீரென மின்சாரம் தாக்கியதில் பாபு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். வேலைக்கு சென்றுவிட்டு இரவு வீட்டுக்கு திரும்பி வந்த அவருடைய மகள் சுமித்திரா, இரும்பு கட்டிலில் தந்தை பேச்சு, மூச்சு இல்லாமல் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனே மின்விசிறியை போட்டபோது, அவரையும் மின்சாரம் தாக்கியதில் தூக்கி வீசப்பட்டார். உடனடியாக மின்சாரத்தை துண்டித்து விட்டு திருவொற்றியூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீசார் பாபு உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஸ்டான்லி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுபற்றி போலீசார் விசாரித்து வருகின்றனர்.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து