தமிழக செய்திகள்

"கொரோனா இல்லை என்ற இலக்கை எட்ட ஒத்துழைப்பு அவசியம்" - சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன்

தமிழகத்தில் கொரோனா இல்லை என்ற பூஜ்ஜியம் இலக்கை எட்ட பொதுமக்களின் ஒத்துழைப்பு அவசியம் தேவை என சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

சென்னை,

இது குறித்து சென்னையில் செய்தியாளர்களிடம் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கூறியதாவது:-

கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் சூழலில் 38 சதவிகிதம் பேர் மட்டுமே முகக்கவசம் அணிகின்றனர். வரும் பண்டிகை காலங்களில் கூட்டம் சேராமால் தனிமையிலேயே கொண்டாடுங்கள்.

தமிழகத்தில் மாவட்டங்களில் கடந்தசில தினங்களாக கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. நாள்தோறும் 4 மாவட்டங்களில் 100-க்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

கொரோனா தொற்றை கட்டுப்படுத்த மக்கள் கூட்டம் கூடுவதை தவிர்க்க வேண்டும். தமிழக அரசு அறிவுறுத்திய கொரோனா கட்டுப்பாடுகளை மக்கள் கட்டாயம் பின்பற்ற வேண்டும்.

தமிழகத்தில் கொரோனா இல்லை என்ற பூஜ்ஜியம் இலக்கை எட்ட பொதுமக்களின் ஒத்துழைப்பு அவசியம் தேவை. பொதுமக்கள் அலட்சியமாக செயல்பட்டால் கொத்து கொத்தாக கொரோனா பரவும் ஆபத்து ஏற்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்