தமிழக செய்திகள்

சென்னையில் உள்ள ரேஷன் கடைகளில் முதன்மை செயலாளர் திடீர் ஆய்வு

தமிழக கூட்டுறவுத்துறை முதன்மை செயலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன், சென்னையில் உள்ள பல்வேறு ரேஷன் கடைகளில் ஆய்வு மேற்கொண்டார்.

தினத்தந்தி

ரேஷன் கடைகளில் தரமான அரிசி மற்றும் உணவுப்பொருட்கள் வழங்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும், ரேஷன் கடைகளில் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த வேண்டும் என்ற முதல்-அமைச்சரின் அறிவுறுத்தலின் படியும், 75-வது ஆண்டு சுதந்திர தின விழா கொண்டாட்டத்தையொட்டி ஒரு மாவட்டத்துக்கு 75 ரேஷன் கடைகள் மக்களை கவரும் வகையில் மாற்றப்பட வேண்டும் என்ற அடிப்படையிலும் சென்னையில் உள்ள ரேஷன் கடைகளில் அவர் திடீர் ஆய்வு நடத்தினார். சிங்கார சென்னையின் ஒரு பகுதியாக பல்வேறு ரேஷன் கடைகள் மக்களை கவரும் வகையில் வண்ண ஓவியங்களுடன் மாற்றப்பட்டு இருப்பதற்கு பாராட்டு தெரிவித்தார்.

அதேபோன்று மாநகராட்சி அதிகாரிகள், உள்ளாட்சி பிரதிநிதிகளின் முயற்சியால் செயல்படுத்தப்படும் 'எனது பகுதி - எனது ரேஷன் கடை' என்ற திட்டத்துக்கும் பாராட்டு தெரிவித்தார். சூளைமேட்டில் உள்ள ரேஷன் கடையின் தற்போதைய நிலை மற்றும் அதனை சரி செய்வது குறித்தும் ஆய்வு செய்தார்.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து