தமிழக செய்திகள்

மயிலாடுதுறை ரயில் நிலையத்தில் போலீசார் தீவிர சோதனை

சுதந்திர தினத்தை முன்னிட்டு மயிலாடுதுறை ரயில் நிலையத்தில் போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.

தினத்தந்தி

மயிலாடுதுறை;

சுதந்திர தினத்தை முன்னிட்டு மயிலாடுதுறை ரயில் நிலையத்தில் போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.

சுதந்திர தினம்

நாடு முழுவதும் இன்று சுதந்திர தினம் கொண்டாடப்படுவதையொட்டி. நேற்று மயிலாடுதுறை ரயில் நிலையத்தில் ரயில்வே போலீசார் தீவிர பாதுகாப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். மயிலாடுதுறை ரெயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவவடிவேலு தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் மணிமேகலை மற்றும் போலீசார் ரயில் நிலைய பார்சல் பகுதி, நுழைவுவாயில் மற்றும் அனைத்து நடைமேடைகளிலும் மெட்டல் டிடெக்டர் உதவியுடன் பயணிகளின் உடமைகள் சோதனை செய்தனர்.

சோதனை

தொடர்ந்து ரயில்களில் உள்ளே ஏறி கேட்பாரற்று பார்சல் ஏதாவது கிடந்தால் அதுகுறித்தும் போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.மேலும் ரயில் நிலையம் முன்பு நிறுத்தப்பட்டு இருந்த இருசக்கர வாகனங்கள் மற்றும் கார் ஆட்டோக்கள் ஆகியவற்றையும் சோதனை செய்தனர். மயிலாடுதுறை ரயில் நிலையத்துக்கு சென்னை மற்றும் திருச்சி, திருவாரூர் ஆகிய மார்க்கங்களில் இருந்து தினமும் 40-க்கும் மேற்பட்ட ரயில்கள் வந்து செல்லும் நிலையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது