தடுப்பூசி மெதுவாக போடுவதால் ஏற்படும் விளைவுகள் குறித்து சர்வதேச பண நிதியம் மற்றும் உலக சுகாதார அமைப்பு ஆகியவை இந்தியாவுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளன. வயது வந்த அனைவருக்கும் தடுப்பூசி போடுவதற்கு டிசம்பர் 31-ந்தேதிக்குள் 216 கோடி தடுப்பூசி அளவை பெறுவதாக மத்திய சுகாதார மந்திரி கூறியிருப்பது கடின தரவுகளால் மட்டுமே ஆதரிக்கப்படவேண்டும்.
இதுவரை அது இல்லை. உள்நாட்டு உற்பத்தியாளர்களின் திறன், தடுப்பூசி வாரியாக செய்யப்பட்டுள்ள ஆர்டர்கள், முடிவுக்கு வந்துள்ள இறக்குமதி ஒப்பந்தங்கள், டெலிவரி செய்ய ஒப்பக்கொள்ளப்பட்ட அட்டவணை போன்றவை நமக்கு தேவைப்படுகிறது. ஆனால் இதுவரை அது வெளியிடப்படவில்லை. தடுப்பூசி போடுவதை துரிதப்படுத்தாவிட்டால் கொரோனா 3-வது அலை வருவதை தடுக்க முடியாது என்பது, அரசுக்கு விடுக்கப்படும் இறுதி எச்சரிக்கையாகும். மோடி அரசு இந்த விளைவுகளை நாங்கள் எதிர்பார்க்கவில்லை என்று சொல்ல முடியாது. அரசுக்கு முறையாக எச்சரிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.