கோப்புப்படம் 
தமிழக செய்திகள்

தமிழகத்தில் புதிதாக 1,559 பேருக்கு கொரோனா பாதிப்பு: மேலும் 26 பேர் பலி

தமிழகத்தில் புதிதாக 1,559 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது

தினத்தந்தி

சென்னை,

தமிழகத்தில் இன்றைய கொரோனா பாதிப்பு குறித்து மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

தமிழகத்தில் இன்று 1,559 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 26,07,206 ஆக உயர்ந்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 26 பேர் (அரசு மருத்துவமனை 20, தனியார் மருத்துவமனை - 6) கொரோனா பாதிப்பால் உயிரிழந்ததையடுத்து, கொரோனாவால் இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 34,814 ஆக உயர்ந்துள்ளது. அதே சமயம் கடந்த 24 மணி நேரத்தில் 1,816 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர்.

இதன் மூலம் கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 25,54,323 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் தற்போது 18,069 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். கடந்த 24 மணி நேரத்தில் 1,60,911 கொரோனா மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டன.

அதிக கொரோனா பாதிப்புகள் பதிவாகியுள்ள மாவட்டங்கள்:-

கோவை - 216, சென்னை - 175, ஈரோடு - 115, செங்கல்பட்டு - 113, திருவள்ளூர் - 77, திருப்பூர் - 73, சேலம் - 65

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு