கோப்புப்படம் 
தமிழக செய்திகள்

தமிழகத்தில் புதிதாக 27,397 பேருக்கு கொரோனா பாதிப்பு: மேலும் 241 பேர் பலி

தமிழகத்தில் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 27,397 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

தினத்தந்தி

சென்னை,

தமிழகத்தில் கட்டுக்குள் இருந்த கொரோனா தொற்று தற்போது 2-வது அலையாக வேகமாக பரவி வருகிறது. இதன் காரணமாக பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தமிழக அரசும், மாவட்ட நிர்வாகமும் எடுத்து வருகிறது. இரவு நேர ஊரடங்கு, ஞாயிறுதோறும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் தமிழகத்தில் இன்று புதிதாக 27,397 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

மாநிலத்தில் இன்று ஒரேநாளில் 27 ஆயிரத்து 397 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், மாநிலத்தில் கொரோனா பரவியவர்களின் மொத்த எண்ணிக்கை 13 லட்சத்து 51 ஆயிரத்து 362 ஆக அதிகரித்துள்ளது.

கொரோனாவால் மேலும் 241 பேர் இறந்த நிலையில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 15,412 ஆக உயர்ந்துள்ளது. (அரசு மருத்துவமனைகளில் 151 பேரும், தனியார் மருத்துவமனைகளில் 90 பேரும் இதில் அடங்குவர்)

கொரோனாவில் இருந்து மேலும் 23,110 பேர் குணமடைந்த நிலையில் இதுவரை 11,96,5549 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். தமிழகத்தில் கொரோனா சிகிச்சையில் இருப்போர் எண்ணிக்கை 1,39,401 ஆக அதிகரித்துள்ளது.

சென்னையில் இன்று புதிதாக 6,846 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், இதுவரை பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 3,83,644 ஆக அதிகரித்துள்ளது.

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்