தமிழக செய்திகள்

தமிழகத்தில் இன்று மேலும் 5,928 பேருக்கு கொரோனா பாதிப்பு

தமிழகத்தில் இன்று மேலும் 5,928 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டு உள்ளதாக தமிழக சுகாதார துறை தகவல் தெரிவித்துள்ளது.

தினத்தந்தி

சென்னை,

தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்து வருகிறது. தமிழக அரசு கொரோனா வைரஸ் தொற்று பரவலைத் தடுக்க தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

இந்நிலையில் தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள தகவலின்படி,

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5,928 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டு உள்ளது. இதன்மூலம் தமிழகத்தில் இதுவரை கொரோனாவில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 4,33,969 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் இன்று கொரோனா பாதிப்புக்கு 96 பேர் உயிரிழந்துள்ளனர். மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 7,418 ஆக உயர்ந்துள்ளது.

மேலும், தமிழகத்தில் இன்று மட்டும் 6,031 பேர் கொரோனாவில் இருந்து மீண்டு டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதனால் ஒட்டு மொத்தமாகத் தமிழகத்தில் இதுவரை குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 3,74,172 ஆக உயர்ந்துள்ளது.

சென்னையில் இன்று ஒரே நாளில் 1,084 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம் பாதிப்பு எண்ணிக்கை 1.36 லட்சமாக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 73,155 பேருக்கும், இதுவரை 47,26,022 பேருக்கும் கொரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு