சென்னை,
நாடு முழுவதும் கொரோனா 2வது அலை பரவலால் தீவிர பாதிப்புகள் ஏற்பட்டன. கடந்த ஆண்டு ஏற்பட்ட முதல் அலையை விட அதிக உயிரிழப்புகளும் ஏற்பட்டன. சமீப வாரங்களாக தமிழகம் உள்பட பல்வேறு மாநிலங்களில் அதன் தீவிரம் குறைந்து வந்தது.
எனினும், அடுத்த சில மாதங்களில் கொரோனா 3வது அலை ஏற்பட வாய்ப்பு உள்ளது என்று நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்து உள்ளனர். இதனை முன்னிட்டு அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் கவனம் செலுத்த தொடங்கியுள்ளது.
இந்நிலையில் சென்னை கலைவாணர் அரங்கில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில், பெருந்தொற்றை தவிர்க்கும் நோக்கில் தமிழ்நாடு அரசின் கொரோனா விழிப்புணர்வு தொடர் பிரசார விழா நடைபெற்றது. அதில் பங்கேற்ற முதல்-அமைச்சர் ஸ்டாலின் விழிப்புணர்வு பிரசார நிகழ்வை தொடக்கி வைத்து உள்ளார்.
இந்த நிகழ்ச்சியில் தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன், சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.