தமிழக செய்திகள்

கொடைக்கானலில் தனியார் பள்ளி மாணவர்கள் 4 பேருக்கு கொரோனா

கொடைக்கானலில் இயங்கி வரும் தனியார் பள்ளியில் 4 மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தினத்தந்தி

திண்டுக்கல்,

தமிழகத்தில் நீண்ட நாட்களுக்குப் பிறகு கடந்த செப்டம்பர் 1-ந் தேதி 9 முதல் 12-ம் வகுப்பு வரை பள்ளிகள் திறக்கப்பட்டன. பள்ளிகளில் கொரோனா தடுப்பு விதிகள் தீவிரமாக பின்பற்றப்பட்டு வரும் நிலையில், ஒரு சில பகுதிகளில் மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு வருகிறது.

அந்த வகையில் கொடைக்கானலில் இயங்கி வரும் தனியார் பள்ளி ஒன்றில் 4 மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்கள் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். அந்த மாணவர்களுடன் தொடர்பில் இருந்ததாக ஆசிரியர்கள், பள்ளி ஊழியர்கள் உள்பட 200-க்கும் மேற்பட்ட நபர்கள் பள்ளி வளாகத்திலேயே தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். அவர்களது உடல்நிலை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதாக பள்ளி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை