தமிழக செய்திகள்

தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்துக்கு கொரோனா உறுதி

தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்துக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

சென்னை,

தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் இன்று காலை 11 மணிக்கு சென்னை ஆழ்வார்பேட்டையிலுள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஆளுநர் பன்வாரிலால் புரோகித் சற்றுமுன்னர் ராஜ்பவன் திரும்பினார்.

இந்நிலையில் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்துக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. பரிசோதனைக்கு பின், ஆளுநர் மாளிகைக்கு திரும்பிய நிலையில் அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகி உள்ளது.

மருத்துவமனை நிர்வாகம் அவருக்கு கொரோனா தொற்றை உறுதி செய்துள்ளது. அறிகுறி ஏதும் இல்லாததால் ஆளுநரை வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொள்ள மருத்துவர்கள் அறிவுறுத்தி உள்ளனர். மேலும் ராஜ்பவனில் தனிமைப்படுத்திக்கொள்ளும் ஆளுநரை மருத்துவர்கள் குழு கண்காணிக்கும் என்றும் மருத்துவமனை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக கடந்த வாரம், ராஜ் பவனில் தீயணைப்பு மற்றும் பாதுகாப்புப் பணியாளர்கள் உட்பட 84 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதையடுத்து ஒரு தடுப்பு நடவடிக்கையாக, ஆளுநர் தனிமைப்படுத்தலில் இருக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இதனால் ஜூலை 29 முதல் ராஜ் பவனில் தனிமைப்படுத்தப்பட்ட நிலையில் அவர் இருந்து வந்தது குறிப்பிடத்தக்கது.

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்

புது ஆம்புலன்சுக்கு உதவிய அஜித் பவார்; கடைசியில் அதிலேயே... நினைவலைகளை சோகத்துடன் பகிர்ந்த ஓட்டுநர்

சத்தீஷ்காரில் என்கவுன்ட்டர்: 2 நக்சலைட்டுகள் படுகொலை

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை