சென்னை,
சென்னை போலீசில் கொரோனா பாதிப்பு நேற்று முன்தினம் 1,836 ஆக இருந்தது. நேற்று 14 பேர் புதிதாக பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் சிகிச்சைக்கு சேர்ந்தனர். இதன் மூலம் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 1,850 ஆக உயர்ந்தது. அதே நேரத்தில், நேற்று 27 பேர் கொரோனாவில் இருந்து குணம் அடைந்து பணிக்கு திரும்பினார்கள். இதனால் பணிக்கு திரும்பியவர்கள் எண்ணிக்கை 1,492 ஆக உயர்ந்தது.