தமிழக செய்திகள்

கொரோனா அச்சம்; 34 ஆயிரம் மாணவ மாணவியர் 12ம் வகுப்பு தேர்வை எழுதவில்லை

கொரோனா வைரஸ் தொற்று அச்சத்தினால் 34 ஆயிரம் மாணவ மாணவியர் 12ம் வகுப்பு பொது தேர்வை எழுதவில்லை.

தினத்தந்தி

சென்னை,

இந்தியாவில் கொரோனா வைரசை எதிர்கொள்வதற்காக மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாடு முழுவதும் நேற்றிரவு முதல் 21 நாட்கள் வரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.

தமிழகத்தில் 12ம் வகுப்பு பொது தேர்வு வழக்கம்போல் நடைபெறும் என அரசு அறிவித்து இருந்தது. எனினும், கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட கூடும் என்ற அச்சம் மற்றும் சரிவர இயங்காத பேருந்துகள் ஆகியவற்றால் நேற்று நடந்த 12ம் வகுப்பு பொது தேர்வை 34 ஆயிரம் மாணவ மாணவியர் எழுதவில்லை என அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.

காஞ்சீபுரம் மாவட்டத்தில் குன்றத்தூர் உள்ளிட்ட சுற்றுப்புற பகுதிகளை சேர்ந்த மாணவர்கள் தேர்வு எழுதவில்லை. அதேபோன்று, திருவள்ளூர் மாவட்டத்தில் 1,574 மாணவர்கள் தேர்வில் பங்கேற்கவில்லை என்ற விவரங்களும் வெளியாகி இருக்கின்றன.

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு