சென்னை,
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சென்னை கோயம்பேடு சந்தைக்கு 500-க்கும் மேற்பட்ட லாரிகளில் செங்கரும்பு கொண்டு வரப்பட்டுள்ளது. இந்நிலையில் கொரோனா அச்சம் காரணமாக பொதுமக்கள் வராததால் கரும்பு விலை வீழ்ச்சி அடைந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.
கடந்த ஆண்டு பொங்கல் பண்டிகையையொட்டி ஒரு கட்டு கரும்பு 400 ரூபாய் வரை விற்பனையானதாகவும், தற்போது 200 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுவதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். கோயம்பேடு மார்க்கெட் நிர்வாகம் லாரி ஒன்றுக்கு 2,500 ரூபாய் நுழைவுக் கட்டணம் வசூலிப்பதும் தங்களை பாதிப்பதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.