தமிழக செய்திகள்

தஞ்சை மாவட்டத்தில் 2 பள்ளிகளில் மேலும் 14 பேருக்கு கொரோனா

தஞ்சை மாவட்டத்தில் 2 பள்ளிகளில் 13 மாணவர்கள், ஒரு ஆசிரியருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தினத்தந்தி

தஞ்சை,

தஞ்சை மாவட்டத்தில் கடந்த 2 வாரமாக கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள், ஆசிரியர்கள் கொரோனா தொற்றுக்கு ஆளாகி வருகின்றனர்.

மேலும் மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளி, கல்லூரிகளிலும் மாணவ-மாணவிகள், ஆசிரியர்கள், பேராசிரியர்களுக்கு முகாம்கள் அமைத்து கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. ஏற்கனவே 14 பள்ளிகளில் 229 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியிருந்தது. இந்நிலையில் தஞ்சை மாவட்டத்தில் மேலும் 2 பள்ளிகளில் 14 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில் உள்ள தனியார் பள்ளியில் 6 மாணவர்கள், ஒரு ஆசிரியருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் ஆடுதுறை பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 7 மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதையடுத்து தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் அனைவரும் தஞ்சாவூ மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சோக்கப்பட்டு, அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்