தமிழக செய்திகள்

திருவண்ணாமலையில் அரசு பள்ளி ஆசிரியர்கள் 2 பேருக்கு கொரோனா

செங்கம் அருகே அரசு பள்ளி ஆசிரியர்கள் 2 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தினத்தந்தி

திருவண்ணாமலை,

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அருகே அரசு மேல்நிலைப்பள்ளியில் 2 ஆசிரியர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அந்த பள்ளியின் வகுப்பு ஆசிரியர் ஒருவருக்கும், உடற்கல்வி ஆசிரியர் ஒருவருக்கும் கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதையடுத்து அந்த பள்ளிக்கு 4 நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் அந்த வகுப்பு ஆசிரியர் சென்று பாடம் நடத்திய வகுப்புகளில் உள்ள அனைத்து மாணவர்களுக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ள சுகாதாரத்துறை சார்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட ஆசிரியர்கள் தனிமைப்படுத்தப்பட்டு, அவர்களுக்கு திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்