தமிழக செய்திகள்

தூத்துக்குடி அரசு மருத்துவ கல்லூரியில் 30 மாணவர்களுக்கு கொரோனா

தூத்துக்குடி அரசு மருத்துவ கல்லூரியில் 30 மாணவர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

தூத்துக்குடி ,

தமிழகத்தில் கொரோனா தொற்று மீண்டும் அதிகரித்து வருகிறது.தினசரி பாதிப்பு 1000-ஐ கடந்துள்ளது.இந்த நிலையில் தூத்துக்குடி அரசு மருத்துவ கல்லூரியில் 30 மாணவர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

200 பேருக்கு செய்யப்பட்ட பரிசோதனையில் 30 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.இதனையடுத்து கொரோனா உறுதி செய்யப்பட்ட மாணவர்கள் விடுதியில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

SCROLL FOR NEXT