தமிழக செய்திகள்

33 பேருக்கு கொரோனா: ஒரு கிராமமே தடைசெய்யப்பட்ட பகுதியாக அறிவிப்பு

திருச்சி மாவட்டத்தில் ஒரே கிராமத்தில் 33 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் அந்த கிராமம் தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது.

திருச்சி,

திருச்சி மாவட்டம் காட்டுப்புத்தூர் அருகே உள்ள உன்னியூர் ஊராட்சிக்கு உட்பட்டது நாகப்பமுதலிபுதூர் கிராமம். இந்த கிராமத்தில் கடந்த சில நாட்களுக்கு முன் கொரோனா பரிசோதனை முகாம் நடத்தப்பட்டது. அப்போது 100-க்கும் மேற்பட்டோருக்கு பரிசோதனை செய்யப்பட்டது.

இந்தநிலையில் நாகப்பமுதலிபுதூர் கிராமத்தில் மட்டும் 33 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து சுகாதாரத்துறை மற்றும் ஊராட்சி நிர்வாகம் சார்பில் தொற்று பாதிக்கப்பட்டவர்களின் வீடுகளில் கிருமி நாசினி தெளித்து தூய்மைப்படுத்தி அவர்களை தனிமைப்படுத்தி வைத்துள்ளனர்.

மேலும் ஒரே கிராமத்தில் 33 பேருக்கு கொரோனா தொற்று இருப்பதால் அந்த கிராமம் தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் நாகப்பமுதலிபுதூர் கிராமத்துக்கு வெளியூரில் இருந்து மக்கள் செல்லாமல் தடுக்க அந்த கிராமத்துக்கு செல்லும் சாலைகள் இரும்பு தகரம் வைத்து அடைக்கப்பட்டுள்ளன.

அத்துடன், அந்த கிராமத்தில் இருந்து பொதுமக்கள் வெளியேறாமல் இருக்க அங்கு போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது. இதனால் பக்கத்து கிராமங்களை சேர்ந்தவர்கள் கொரோனா பீதியில் உள்ளனர்.

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு