தமிழக செய்திகள்

கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றவில்லை; தஞ்சையில் 16 பள்ளிகள், 4 கல்லூரிகளுக்கு அபராதம்

தஞ்சையில் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றாததால் 16 பள்ளிகள், 4 கல்லூரிகளுக்கு தலா ரூ.5,000 அபராதம் விதித்து மாவட்ட ஆட்சியர் கோவிந்த ராவ் உத்தரவிட்டுள்ளார்.

தஞ்சை,

தஞ்சை மாவட்டத்தில் கடந்த 2 வாரமாக கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள், ஆசிரியர்கள் கொரோனா தொற்றுக்கு ஆளாகி வருகின்றனர்.

தஞ்சையில் ஏற்கனவே 14 பள்ளிகளில் 229 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியிருந்தது. இந்நிலையில் இன்றைய தினம் மேலும் 2 பள்ளிகளில் 14 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதையடுத்து தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் அனைவரும் தஞ்சாவூ மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் தஞ்சை மாவட்டத்தில் ஆசிரியர்கள், மாணவர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ள 16 பள்ளிகள் மற்றும் 4 கல்லூரிகளுக்கு தலா ரூ.5,000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இந்த பள்ளிகள் அரசாங்கம் அறிவித்த கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றவில்லை என்பதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் கோவிந்த ராவ் தெரிவித்துள்ளார்.

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்

புது ஆம்புலன்சுக்கு உதவிய அஜித் பவார்; கடைசியில் அதிலேயே... நினைவலைகளை சோகத்துடன் பகிர்ந்த ஓட்டுநர்

சத்தீஷ்காரில் என்கவுன்ட்டர்: 2 நக்சலைட்டுகள் படுகொலை

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை