தமிழக செய்திகள்

செங்கல்பட்டில் கூடுதலாக 45 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி

செங்கல்பட்டு மாவட்டத்தில் கூடுதலாக 45 பேருக்கு கொரோனா பாதிப்பு இன்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.

செங்கல்பட்டு,

தமிழகத்தில் கொரோனா பரவல் நாள்தோறும் தீவிரமடைந்து வருகிறது. கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை தமிழக அரசு முனைப்புடன் செயல்படுத்தி வருகிறது. இதன் ஒரு பகுதியாக ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டு உள்ளது. இந்த உத்தரவு வருகிற 31ந்தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில், செங்கல்பட்டு மாவட்டத்தில் 31 பேருக்கு கொரோனா பாதிப்பு நேற்று உறுதியானது. செங்கல்பட்டு மாவட்டத்தில் நேற்றுவரை 245 பேர் குணமடைந்துள்ளனர். 513 பேர் சிகிச்சை பெற்றும் 6 பேர் உயிரிழந்தும் உள்ளனர்.

இந்நிலையில், செங்கல்பட்டு மாவட்டத்தில் கூடுதலாக 45 பேருக்கு கொரோனா பாதிப்பு இன்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதனை தொடர்ந்து, கொரோனோ பாதிப்பு எண்ணிக்கை செங்கல்பட்டில் 824 ஆக உயர்வடைந்து உள்ளது.

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்