தமிழக செய்திகள்

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 124 ஆக உயர்வு

தமிழகத்தில் கூடுதலாக 50 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது.

தினத்தந்தி

சென்னை,

தமிழகத்தில் 64 பேர் கொரோனா பாதிப்புக்கு ஆளாகி உள்ளனர் என நேற்றுவரை தெரிவிக்கப்பட்டு இருந்தது. இன்று காலை கூடுதலாக 7 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது என்று சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்தது. இதன் மூலம் தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டோரின் எண்ணிக்கை 74 ஆக அதிகரித்தது.

இந்நிலையில், சுகாதார துறை செயலாளர் பீலா ராஜேஷ் இன்று செய்தியாளர்களிடம் கூறும்பொழுது, டெல்லி நிஜாமுதீனில் நடந்த மாநாட்டில் கலந்து கொண்டவர்களில் 1,131 பேர் தமிழகம் வந்துள்ளனர். அவர்களில் 515 பேர் வரை கண்டறியப்பட்டு உள்ளனர். மீதமுள்ளவர்களை தேடும் பணி நடந்து வருகிறது.

அவர்களிடம் நடந்த கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய பரிசோதனையில் 50 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டு உள்ளது. அவர்கள் அனைவரின் உடல் நலமும் சீராக உள்ளது. யாரும் அவசர சிகிச்சை பிரிவில் இல்லை என்று கூறியுள்ளார். இதனால் தமிழகத்தில் கொரோனா பாதித்தோரின் மொத்த எண்ணிக்கை 124 ஆக உயர்ந்து உள்ளது.

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை