தமிழக செய்திகள்

சென்னையில் கொரோனா பாதிப்பு 167 ஆக உயர்வு

சென்னையில் கொரோனா பாதிப்பு நேற்றுடன் ஒப்பிடும்போது, இன்று 167 ஆக உயர்ந்து உள்ளது.

தினத்தந்தி

சென்னை,

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை சமீப காலங்களாக குறைந்து வருகிறது. இதேபோன்று சென்னையிலும் தொற்று குறைந்து வருகிறது. இந்நிலையில், தமிழக சுகாதார துறை இன்று வெளியிட்டுள்ள செய்தியில், சென்னையில் 167 பேருக்கு (நேற்று 163), (நேற்று முன்தினம் 173) கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது என தெரிவித்து உள்ளது.

இதனால், சென்னையில் இன்று தொற்று எண்ணிக்கை உயர்ந்து உள்ளது. எனினும், கோவையில் பாதிப்பு இன்று 139 (நேற்று 143) ஆக உறுதியானது. இது நேற்று முன்தினம் 137 ஆக இருந்தது. செங்கல்பட்டில் 92 (நேற்று 104) ஆக பதிவாகி உள்ளது. நேற்று முன்தினம் இந்த எண்ணிக்கை 95 ஆக இருந்தது.

இதேபோன்று கொரோனா பாதிப்பு ஆனது, ஈரோடு 91, திருப்பூர் 71, தஞ்சை 59, திருவள்ளூர் 59, சேலம் 54, நாமக்கல் 50, திருச்சி 49 என்று பதிவாகி உள்ளது.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து