கோப்புப்படம் 
தமிழக செய்திகள்

தமிழகத்தில் தொடர்ந்து குறையும் கொரோனா பாதிப்பு: புதிதாக 30,016 பேருக்கு தொற்று உறுதி

தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 30,016 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

தினத்தந்தி

சென்னை,

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை சற்று குறைந்து வருகிறது.

இந்தநிலையில் இன்றைய கொரோனா பாதிப்பு குறித்து சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

தமிழகத்தில் 1,74,349 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்ட நிலையில் மேலும் 30,016 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளது. இதன்மூலம் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 20,39,716 ஆக உயர்ந்துள்ளது.

கொரோனாவால் கடந்த 24 மணி நேரத்தில் 486 பேர் (அரசு மருத்துவமனைகளில் 305 பேரும், தனியார் மருத்துவமனைகளில் 181 பேரும்) இறந்த நிலையில், உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 23,261 ஆக உயர்ந்துள்ளது.

தமிழகத்தில் கொரோனா சிகிச்சையில் இருப்போர் எண்ணிக்கை 3,10,157 ஆக உள்ளது. கொரோனாவில் இருந்து மேலும் 31,759 பேர் குணமடைந்த நிலையில் இதுவரை 17,06,298 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர்.

தமிழகத்தில் அதிகபட்சமாக கோவையில் 3,692 பேருக்கும், சென்னையில் புதிதாக 2,705 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்