திருவாரூர்,
தமிழகத்தில் கடந்த 1-ந் தேதி முதல் பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட்டு கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி செயல்பட்டு வருகின்றன. பள்ளிகளில் 9, 10, 11, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டுமே வகுப்புகள் நடந்து வரும் நிலையில், மாணவர்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்படும் வரும் சம்பவங்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இந்தநிலையில், இன்று திருவாரூர் மாவட்டத்தில் மேலும் 2 மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
அடியக்கமங்கலம் அரசு பள்ளி பிளஸ் 2 மாணவிக்கும், முனவால்கோட்டை அரசு பள்ளி பிளஸ் 2 மாணவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்ட மாணவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.