தமிழக செய்திகள்

விருதுநகர் மாவட்டத்தில் மேலும் 203 நபர்களுக்கு கொரோனா தொற்று

விருதுநகர் மாவட்டத்தில் இன்று மேலும் 203 நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தினத்தந்தி

விருதுநகர்,

விருதுநகர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் வரை 58,398 பேருக்கு மருத்துவ பரிசோதனை செய்ததில் 8,180 பேருக்கு கொரோனா தொற்று உறுதி ஆனது.

இதில் 4,664 பேர் இதுவரை சிகிச்சை முடிந்து வீடு திரும்பி உள்ளனர். 6 சிறப்பு தனிமைப்படுத்தும் மையங்களில் 871 பேர் தனிமைப்படுத்தி வைக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் விருதுநகர் மாவட்டத்தில் இன்று மேலும் 203 நபர்களுக்கு கொரோனா தொற்று பதிவு செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் மாவட்டத்தில் பாதிப்பு எண்ணிக்கை 8,541ஆக உயர்ந்துள்ளது.

மேலும் 5 பெண் செவிலியர்கள், 5 தூய்மை பணியாளர்களுக்கும் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

கடந்த 5 நாட்களில் மட்டும் கொரோனாவால் 27 பேர் பலியாகி உள்ளனர். கொரோனா தொற்று தொடர்ந்து அதிகரிப்பதால் விருதுநகர் மாவட்ட மக்கள் அச்சமடைந்துள்ளனர்.

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்