கோப்புப்படம் 
தமிழக செய்திகள்

தமிழகத்தில் இன்றைய கொரோனா பாதிப்பு: புதிதாக 479 பேருக்கு தொற்று உறுதி

தமிழகத்தில் புதிதாக 479 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டு உள்ளது.

தினத்தந்தி

சென்னை,

தமிழக சுகாதாரத் துறை இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தமிழகத்தில் இன்று புதிதாக 479 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 8 லட்சத்து 43 ஆயிரத்து 209 ஆக உயர்வடைந்து உள்ளது.

மேலும் கொரோனா பாதிப்பில் இருந்து மேலும் 493 பேர் குணமடைந்துள்ளனர். இதனால், மொத்த குணமடைந்தோர் எண்ணிக்கை 8 லட்சத்து 26 ஆயிரத்து 504 ஆக உயர்வடைந்து உள்ளது. சமீப நாட்களாக கொரோனா பாதிப்புகளால் உயிரிழப்பு எண்ணிக்கை குறைந்து வருகிறது. இன்று கொரோனா பாதிப்பால் மேலும் 5 பேர் உயிரிழந்தனர். இதன்மூலம் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 12 ஆயிரத்து 396 ஆக உள்ளது. தற்போது 4,309 பேர் மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். சென்னையில் இன்று ஒரே நாளில் 149 பேர் கொரோனானால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்