கோப்புப்படம் 
தமிழக செய்திகள்

சென்னை, நெல்லை உள்ளிட்ட பகுதிகளில் கொரோனா தொற்று குறைந்து வருகிறது - சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன்

சென்னை, நெல்லை உள்ளிட்ட பகுதிகளில் கொரோனா தொற்று குறைந்து வருவதாக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

தினத்தந்தி

சென்னை,

தமிழகத்தில் கொரோனா பரவலின் 2-வது அலை வேகம் எடுத்துள்ள நிலையில், அதை கட்டுக்குள் கொண்டுவர தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

இதனிடையே கொரோனா பரவல் அதிகரிப்புக்கான காரணம் குறித்தும், அதை கட்டுப்படுத்துவதற்கு எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று மருத்துவ நிபுணர்களுடன் ஆலோசனை நடத்தி வருகிறார்.

இந்த ஆலோசனை கூட்டம் சென்னை தலைமைச்செயலகத்தில் காலை 10 மணிக்கு தொடங்கியது. இந்தக் கூட்டத்தில் பங்கேற்கும் மருத்துவ குழுவினர் தெரிவிக்கும் கருத்துக்களின் அடிப்படையில், முழு ஊரடங்கை தீவிரப்படுத்துவது குறித்து முக்கிய முடிவுகள் எடுக்கப்பட இருக்கின்றன.

இந்நிலையில் சென்னை, நெல்லை உள்ளிட்ட பகுதிகளில் கொரோனா தொற்று குறைந்து வருவதாக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

முன்னதாக சென்னையில் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அவர், ஆய்வகங்களில் கூடுதலாக பாசிட்டிவ் என வந்தால் ஆய்வு செய்ய முடிவு செய்யப்பட்டு உள்ளது. கொரோனா பரிசோதனைக்கான கட்டணங்கள் குறைக்கப்பட்டு உள்ளது. ஊரடங்கு தொடர்பாக மருத்துவ நிபுணர்களுடன் முதல்-அமைச்சர் இன்று ஆலோசனை நடத்துகிறார். நெல்லை, சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் பாதிப்பு குறைந்து வருகிறது. கடந்த முறை பொது மக்கள் நல்ல முறையில் ஒத்துழைப்பு வழங்கினார்கள். இந்த முறை கூடுதலாக ஒத்துழைப்பு வழங்க வேண்டும். இதன் மூலம் பாதிப்பை வேகமாக குறைக்க முடியும். கொரோனா தடுப்பூசிகள் கூடுதலாக வேண்டும் என மத்திய அரசிடம் கேட்கப்பட்டு உள்ளது என்று சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து

ஜன.30-ல் மேற்கு வங்காளம் செல்கிறார் அமித்ஷா

2047-ம் ஆண்டிற்குள் இந்தியாவில் 400 விமான நிலையங்கள்: பிரதமர் மோடி

7 முறை எம்.எல்.ஏ... அஜித் பவாரின் குடும்ப, அரசியல் வாழ்க்கை விவரம் வெளியீடு