சென்னை,
தமிழகத்தில் கொரோனா பரவல் மீண்டும் வேகம் எடுத்துள்ளது. தொற்று பரவல் தினம் தினம் காட்டுத்தீ போல அதிகரித்து வருகிறது. கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த இரவு ஊரடங்கு, ஞாயிற்றுக்கிழமை ஊரடங்கு போன்ற கட்டுப்பாடுகள் பல்வேறு அமல்படுத்தப்பட்டுள்ளன.
இதனிடையே கொரோனா பாதிப்பால் அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள் உள்பட பல்வேறு தரப்பினரும் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில், வனத்துறை அமைச்சர் கா.ராமச்சந்திரனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து அமைச்சர் கா.ராமச்சந்திரன் குன்னூர் அருகே இளித்தொரை கிராமத்தில் உள்ள அவரது இல்லத்தில் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார். மேலும் அண்மையில் என்னை சந்தித்தவர்கள் பாதுகாப்பாக இருந்து கொள்ளவும் கேட்டுக்கொண்டுள்ளார்.
இன்று காலை வணிகத்துறை அமைச்சர் மூர்த்திக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.