புதுச்சேரி,
புதுச்சேரி முதல்வர் அலுவலகத்தில் பணியாற்றும் ஊழியருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் முதல்வர் நாராயணசாமி உள்பட அலுவலக ஊழியர்கள் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை நடத்தப்படவுள்ளது.
முதல்வரின் வீடு, அலுவலகம் ஆகிய இடங்களில் பணியில் ஈடுபட்டுள்ள போலீசாருக்கும் கொரோனா பரிசோதனை நடத்தப்பட உள்ளதாக முதல்வர் அலுவலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.