தமிழக செய்திகள்

கொரோனா தடுப்பு; மெட்ரோ ரெயிலில் டோக்கனுக்கு பதில் டிக்கெட்

கொரோனா பரவலை தடுக்கும் வகையில் மெட்ரோ ரெயிலில் டோக்கனுக்கு பதில் டிக்கெட் வழங்க முடிவு செய்யப்பட்டு உள்ளது.

தினத்தந்தி

சென்னை,

மெட்ரோ ரெயில் நிலையங்களில் டோக்கன் நடைமுறையை மாற்றி க்யூ-ஆர் கோடு பொறித்த காகித டிக்கெட் நடைமுறை கொண்டுவரப்பட உள்ளதாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

சென்னையில் மெட்ரோ ரெயில் சேவையை 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பயன்படுத்தி வருகின்றனர். விடுமுறை மற்றும் திருவிழா நாட்களில் இச்சேவையை பயன்படுத்துவோரின் எண்ணிக்கை 1 லட்சம் வரையில் காணப்படும்.

கொரோனா பரவலை கட்டுப்படுத்த மெட்ரோ ரெயில் நிர்வாகம் சார்பில் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், மெட்ரோ ரெயில் நிலையங்களில் பிளாஸ்டிக்கால் ஆன டோக்கன்களே பயன்படுத்தப்பட்டு வருகிறது.

இந்த டோக்கன்கள் சுழற்சி முறையில் பயன்படுத்தப்படும். டோக்கன்களை அதற்குரிய உள்நுழையும் இயந்திரத்தில் காண்பித்தால் மட்டுமே பயணிகள் மெட்ரோ ரெயில் நிலையங்களுக்குள் செல்ல முடியும். எனவே, கொரோனா பரவலை தடுக்க சுழற்சி முறையில் பயன்படுத்தப்படும் டோக்கன் நடைமுறையை மாற்றி க்யூ-ஆர் கோடு பொறிக்கப்பட்ட காகித டிக்கெட் நடைமுறையை கொண்டுவர மெட்ரோ ரெயில் நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. நிலையத்தில் இருந்து வெளியேறவும், உள்நுழையவும் இந்த டிக்கெட் பயன்படும்.

இதனால், ஒருவர் பயன்படுத்திய டிக்கெட்டை வேறு ஒருவர் பயன்படுத்துவது தவிர்க்கப்படும். 40 மெட்ரோ ரெயில் நிலையங்களில் இதனை நடைமுறைப்படுத்த அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர். இதற்காக மெட்ரோ ரெயில் நிலையங்களில் இயந்திரங்கள் நிறுவப்படும் பணி விரைவில் தொடங்கும் என மெட்ரோ ரெயில் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு