தமிழக செய்திகள்

கொரோனா தடுப்பு பணிகள்; முதல் அமைச்சர் நிவாரண நிதிக்கு ரூ.347.76 கோடி நன்கொடை

கொரோனா தடுப்பு பணிக்காக முதல் அமைச்சர் நிவாரண நிதிக்கு இதுவரை ரூ.347.76 கோடி நன்கொடை வந்துள்ளது.

தினத்தந்தி

சென்னை,

தமிழகத்தில் கொரோனா வைரஸ் நோய் தொற்று தீவிரமடைந்து வருகிறது. அதனை தடுக்க பல்வேறு தீவிர நோய்தடுப்பு பணிகளையும், நிவாரண பணிகளையும் போர்க்கால அடிப்படையில் தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது.

கொரோனா பாதிப்பு பேரிடர் காலமாக அறிவிக்கப்பட்டிருப்பதால் முதல்-அமைச்சரின் நிவாரண நிதிக்கு தாராளமாக நிதி வழங்குமாறு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள் விடுத்திருந்தார். இதன்படி தொழிலதிபர்கள், அரசு, தனியார் ஊழியர்கள், நடிகர் நடிகைகள், பள்ளி குழந்தைகள் மற்றும் பொதுமக்கள் வரையில் பல்வேறு தரப்பினர் நிதி வழங்கி வருகிறார்கள்.

அந்த வகையில், கொரோனா தடுப்பு பணிக்காக முதல் அமைச்சர் நிவாரண நிதிக்கு இதுவரை ரூ.347.76 கோடி நன்கொடை வந்துள்ளது. கடந்த 5 நாட்களில் ரூ.41.34 கோடி நிவாரண நிதி வழங்கப்பட்டுள்ளது. இவற்றில் அதிகபட்சமாக தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் ரூ.20 கோடி வழங்கியுள்ளது.

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை