தமிழக செய்திகள்

கொரோனா நிவாரணம் ரூ.2 ஆயிரத்தை முதல்-அமைச்சர் நிதிக்கு அனுப்பிய மூதாட்டி

தமிழக அரசு அரிசி பெறும் குடும்ப அட்டைதாரர்கள் அனைவருக்கும் முதல் தவணையாக ரூ.2 ஆயிரம் கொரோனா நிவாரண நிதி வழங்கி வருகிறது.

தினத்தந்தி

தேனி,

இதற்கிடையே கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்கவும், நோய் தொற்றில் இருந்து மக்களை காக்கவும் முதல்-அமைச்சர் நிவாரண நிதிக்கு, தாராளமாக நிதி வழங்குமாறு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்தார். இதையடுத்து பல்வேறு தரப்பினரும் முதல்-அமைச்சர் நிவாரண நிதிக்கு நிதி வழங்கி வருகிறார்கள்.

தேனி மாவட்டம் உத்தமபாளையம் அருகே உள்ள ஓடைப்பட்டி பேரூராட்சி சுக்காங்கல்பட்டியை சேர்ந்த பழனிசாமி மனைவி ரத்தினம்மாள் (வயது 74). இவர் தங்களுக்கு அரசு கொடுத்த கொரோனா நிவாரண நிதி ரூ.2 ஆயிரத்தை முதல்-அமைச்சர் நிவாரண நிதிக்கு அனுப்பினார். வயதான இந்த தம்பதி தங்கள் பிள்ளைகள் பராமரிப்பில் வாழ்ந்து வருகின்றனர். இருந்தபோதிலும் தங்களால் இயன்ற உதவியை அரசுக்கு செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் இதனை கொடுத்ததாக ரத்தினம்மாள் தெரிவித்தார்.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து