தமிழக செய்திகள்

“17 மாவட்டங்களில் நோய் பரவல் குறைகிறது” - சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தகவல்

தமிழகத்தின் 17 மாவட்டங்களில் நோய் பரவல் குறைந்து வருவதாக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

தினத்தந்தி

சேலம்,

சேலம் அரசு மருத்துவமனையில் உள்ள கொரோனா சிகிச்சை மையத்தில் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆய்வு மேற்கொண்டார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழகத்தின் 17 மாவட்டங்களில் தொற்று பரவல் குறைந்து வருவதாக தெரிவித்தார். மேலும் கொரோனா சிகிச்சைக்கு கூடுதல் கட்டணம் வசூலிக்கும் மருத்துவமனைகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தார்.

நேற்றைய தினம் வரை 95.91 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாகவும், 1.52 லட்சம் தடுப்பூசிகள் கையிருப்பு உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இந்த மாதம் தமிழ்நாட்டிற்கு மத்திய அரசு 42 லட்சம் தடுப்பூசிகளை ஒதுக்கியிருப்பதாக ராதாகிஷ்ணன் கூறினார்.

தற்போது செலுத்தப்படும் கோவேக்சின், கோவிஷீல்டு 2 தடுப்பூசிகளும் பாதுகாப்பானது தான் என்று தெரிவித்த அவர், எந்த தடுப்பூசியாக இருந்தாலும் அதனை மக்கள் செலுத்திக் கொள்ள வேண்டும் என வலியுறுத்தினார். முதல் டோஸ் செலுத்திக் கொள்ளும் அதே தடுப்பூசியை, 2வது டோஸ் செலுத்தும் போதும் போட்டுக் கொள்ள வேண்டும் என்று அவர் கூறினார்.

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது