தமிழக செய்திகள்

வண்டலூர் உயிரியல் பூங்காவில் விலங்குகளுக்கு கொரோனா பரிசோதனை

வண்டலூர் உயிரியல் பூங்காவில் சிங்கங்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து அனைத்து விலங்குகளுக்கும் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

தினத்தந்தி

சென்னை,

வண்டலூர் உயிரியல் பூங்காவில் சிங்கங்களுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதால், 11 சிங்கங்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் 9 சிங்கங்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், உடல்நலக்குறைவால் 9 வயது பெண்சிங்கம் உயிரிழந்துள்ளது. இதனால் மற்ற சிங்கங்களை தனிமைப்படுத்தும் பணியில் பூங்கா ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் இன்று வனத்துறை உயர் அதிகாரிகள் வண்டலூர் உயிரியல் பூங்காவில் ஆய்வு நடத்தினர். தமிழ்நாடு கால்நடை மருத்துவ பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மருத்துவர்கள், பூங்கா மருத்துவர்கள், தலைமை வன பாதுகாப்பு அதிகாரி யுவராஜ் ஆகியோர் விலங்குகளை பரிசோதித்தனர்.

அப்போது பூங்காவில் இருக்கும் சிறுத்தை, புலி உள்பட விலங்குகள் அனைத்திற்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அனைத்து விலங்குகளுக்கும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க மருந்துகளும், வைட்டமின் மாத்திரைகளும் வழங்கப்பட்டன. பூங்கா ஊழியர்கள் முழு கவச உடை அணிந்த பிறகே பூங்காவிற்குள் அனுமதிக்கப்பட்டனர்.

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு