கரூர்,
கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி அருகே உள்ள பள்ளப்பட்டியில், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக, அங்குள்ள தனியார் பள்ளியில் 100 படுக்கைகளுடன் கூடிய கொரோனா பாதுகாப்பு மையம் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு கொரோனா சிகிச்சைக்கு தேவையான அனைத்து உபகரணங்களும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.
இந்த சிகிச்சை மையத்தை திறந்து வைக்கும் நிகழ்வு இன்று நடைபெற்றது. இதில் மின்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி கலந்து கொண்டு சிகிச்சை மையத்தை திறந்து வைத்தார். மேலும், பள்ளப்பட்டி அரசு மருத்துவமனைக்கு தனியார் அமைப்பு மூலம் 10 ஆக்சிஜன் செறிவூட்டிகளை அமைச்சர் செந்தில் பாலாஜி வழங்கினார்.