தமிழக செய்திகள்

400 இடங்களில் இன்று கொரோனா தடுப்பூசி முகாம்

400 இடங்களில் இன்று கொரோனா தடுப்பூசி முகாம் நடக்கிறது.

தினத்தந்தி

தமிழகத்தில் மீண்டும் பரவி வரும் கொரோனா வைரசை தடுக்க அரசின் உத்தரவின்படி, பெரம்பலூர் மாவட்டத்தில் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை சார்பில் கொரோனா தடுப்பூசி செலுத்தி கொள்வதற்கான 36-வது சிறப்பு முகாம்கள் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற உள்ளது. இம்முகாம்களில் 11,600 பேருக்கு தடுப்பூசி செலுத்திடும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 29 ஆரம்ப சுகாதார நிலையங்கள், 4 அரசு மருத்துவமனைகள் உள்பட மொத்தம் 400 இடங்களில் சிறப்பு முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளது. எனவே இன்று நடைபெறும் சிறப்பு முகாம்களில் இதுவரை தடுப்பூசி எடுத்துக் கொள்ளாதவர்களும், முதல் தவணை தடுப்பூசி எடுத்துக் கொண்டு இரண்டாம் தவணை செலுத்த உள்ளவர்களும், 2 தவணை முடிந்து முன்னெச்சரிக்கை (பூஸ்டர்) தவணை தடுப்பூசி செலுத்தி கொள்ளாதவர்களும், தடுப்பூசி செலுத்தி கொள்ளலாம் என்று மாவட்ட சுகாதாரத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்