தமிழக செய்திகள்

சேலத்தில் கொரோனா தடுப்பூசி முகாம் இன்று ரத்து - கலெக்டர் கார்மேகம் தகவல்

சேலத்தில் கொரோனா தடுப்பூசி முகாம் இன்று ரத்து செய்யப்படுள்ளதாக கலெக்டர் கார்மேகம் தகவல் தெரிவித்துள்ளார்.

சேலம்,

சேலம் மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசிகள் இருப்புக்கு ஏற்றவாறு மையங்கள் ஏற்படுத்தப்பட்டு பொதுமக்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் மாவட்ட முழுவதும் 138 மையங்களில் கடந்த 2 நாட்களாக கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வந்தன. இதற்காக மையங்களுக்கு 15 ஆயிரத்து 500 தடுப்பூசிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டன. பொதுமக்களும் ஆர்வமுடன் மையங்களுக்கு சென்று தடுப்பூசி செலுத்தி கொண்டனர்.

இந்த நிலையில் கொரோனா தடுப்பூசிகள் இருப்பு இல்லாத காரணத்தினால் இன்று (புதன்கிழமை) மாவட்டத்தில் உள்ள அனைத்து மையங்களிலும் தடுப்பூசி முகாம் ரத்து செய்யப்பட்டு உள்ளதாக கலெக்டர் கார்மேகம் தெரிவித்துள்ளார்.

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்

புது ஆம்புலன்சுக்கு உதவிய அஜித் பவார்; கடைசியில் அதிலேயே... நினைவலைகளை சோகத்துடன் பகிர்ந்த ஓட்டுநர்

சத்தீஷ்காரில் என்கவுன்ட்டர்: 2 நக்சலைட்டுகள் படுகொலை