கோப்புப்படம் 
தமிழக செய்திகள்

தமிழகத்தில் ஒரே நாளில் 10 ஆயிரம் பேருக்கு கொரோனா தடுப்பூசி: சுகாதாரத்துறை செயலாளர் தகவல்

தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 10 ஆயிரத்து 256 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டதாக சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

தினத்தந்தி

சென்னை,

தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி 3-வது நாளாக நேற்று (திங்கட்கிழமை) நடைபெற்றது. தமிழகத்தில் இதுவரை 16 ஆயிரத்து 462 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் நேற்று 17 ஆயிரத்து 700 பேருக்கு தடுப்பூசி செலுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தது. ஆனால் நேற்று 10 ஆயிரத்து 256 பேர் மட்டுமே கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டுள்ளனர். இது 57.94 சதவீதம் ஆகும். இதுகுறித்து சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன் கூறியதாவது:-

தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்ட அனைத்து டாக்டர்கள், செவிலியர்கள், சுகாதார பணியாளர்கள், மருத்துவ பணியாளர்கள் அனைவருக்கும் என்னுடைய பாராட்டுகளை தெரிவித்துக்கொள்கிறேன். தமிழகத்தில் இன்று (நேற்று) 177 மையங்களில் தடுப்பூசி செலுத்தும் பணி நடைபெற்றது.

இதில் 10 ஆயிரத்து 51 சுகாதார பணியாளர்கள் கோவிஷீல்டு தடுப்பு மருந்தும், 205 சுகாதார பணியாளர்கள் கோவேக்சின் தடுப்பு மருந்தும் என மொத்தம் 10 ஆயிரத்து 256 பேர் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டுள்ளனர். இதுவரை தடுப்பூசியை டாக்டர்கள், செவிலியர்கள், மருத்துவ பணியாளர்கள், சுகாதார பணியாளர்கள் மட்டுமே போட்டுள்ளனர். தமிழகத்தில் இதுவரை கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களுக்கு எந்த ஒரு பக்க விளைவுகளும் ஏற்படவில்லை.

பொங்கல் விடுமுறை முடிந்துவிட்டதால் தடுப்பூசி செலுத்துபவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரிக்கும். தடுப்பூசி டோஸ் வைக்கப்பட்டுள்ள எண்ணிக்கை சில நேரங்களில் தடுப்பூசி செலுத்துபவர்களின் எண்ணிக்கைக்கு நிர்ணயம் செய்யப்பட்ட இலக்கு என தவறாக புரிந்து கொள்ளப்படுகிறது. இது இலக்கு சம்பந்தப்பட்ட திட்டம் இல்லை. விருப்பம் சம்பந்தப்பட்ட திட்டமாகும். மத்திய அரசின் ஆலோசனைபடி தடுப்பூசி செலுத்தப்படும் மையங்களில் எண்ணிக்கையை குறைக்கவோ, கூட்டவோ நடவடிக்கை எடுக்கப்படும்.

சுகாதார பணியாளர்கள் பலர் தாமாக முன்வந்து தடுப்பூசி போட்டுக்கொள்வது மற்றவர்களை ஊக்குவிப்பதாக உள்ளது. அரசு சுகாதார ஊழியர்களுக்கு முதல் கட்டமாக கவனம் செலுத்தப்பட்டாலும், தனியார் சுகாதார ஊழியர்களுக்கும் கொரோனா தடுப்பு மருந்து இலவசம் தான். பெரிய தனியார் மருத்துவமனை மற்றும் மருத்துவ நிறுவனங்களில் கொரோனா தடுப்பூசி செலுத்த படிப்படியாக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. சிறிய தனியார் மருத்துவமனை மற்றும் மருத்துவ நிறுவனங்கள் அருகில் உள்ள அரசு மையங்களை பயன்படுத்தி கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளன. இதன் மூலம் தடுப்பூசி போட்டுக்கொள்ளும் சுகாதார பணியாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்று அவர் கூறினார்.

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை