தமிழக செய்திகள்

தமிழகத்தில் 16-ந் தேதி கொரோனா தடுப்பூசி; மதுரையில் தொடங்கி வைக்கிறார் முதலமைச்சர் பழனிசாமி

தமிழகத்தில் 16-ந் தேதி கொரோனா தடுப்பூசி போடும் பணியை முதலமைச்சர் பழனிசாமி மதுரையில் தொடங்கி வைக்கிறார்.

தினத்தந்தி

சென்னை,

தமிழகத்தில் கொரோனா பரவலை தடுக்க கடந்த மார்ச் 24-ந் தேதியில் இருந்து ஊரடங்கு உத்தரவு நடைமுறையில் உள்ளது. இந்த நிலையில் கொரோனா தொற்றிலிருந்து பாதுகாத்துக் கொள்வதற்கான தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் இந்த தடுப்பூசி போடும் பணியை பிரதமர் நரேந்திர மோடி வருகிற 16-ந் தேதியன்று தொடங்கி வைக்கிறார். அதற்காக இந்தியாவின் அனைத்து பகுதிகளுக்கும் தடுப்பூசி மருந்துகள் அனுப்பப்பட்டு வருகின்றன.

தமிழகத்தில் இதை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி 16-ந் தேதி மதுரை ராஜாஜி அரசு ஆஸ்பத்திரியில் தொடங்கி வைக்கிறார். பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைக்கும் நிகழ்ச்சி நிரல் இன்னும் அரசுக்கு வரவில்லை.

அவரது நிகழ்ச்சிக்கு ஏற்ப முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொள்ளும் இந்த நிகழ்ச்சிக்கான நேரம் ஏற்பாடு செய்யப்படும் என்று உயர் அதிகாரிகள் தெரிவித்தனர்.

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்