தமிழக செய்திகள்

நாளை முதல் கொரோனா தடுப்பூசி ஒத்திகை தமிழகத்தில் எங்கெங்கு தெரியுமா

சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனை உட்பட சென்னையில் 3 இடங்களிலும் , நீலகிரி அரசு மருத்துவமனை உட்பட நீலகிரி மாவட்டத்தில் மூன்று இடங்களிலும் , நெல்லை மாவட்டத்தில் மூன்று இடங்கள் என 11 இடங்களில் தடுப்பூசி ஒத்திகை நடைபெறுகிறது.

சென்னை

கொரோனா தடுப்பூசி ஒத்திகை தமிழகத்தில் நாளை (ஜன.2) முதல் தொடங்குகிறது. தமிழகத்தில் 11 இடங்களில் இந்த ஒத்திகை நடக்க உள்ளதாக மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

கொரோனா தொற்று கடந்த ஆண்டு பிப்ரவரி மாதத்தில் இந்தியாவில் பரவ தொடங்கியது. மார்ச்.25-ம் தேதி முதல் அரசு நாடு முழுவதும் ஊரடங்கை அமல்படுத்தியது. இந்தியாவில்கொரோனா தொற்று வேகமாக பல மாநிலங்களில் பரவியது. தமிழகத்திலும் கொரோனா தொற்று வேகமாக பரவியது.

அரசு எடுத்த நடவடிக்கை காரணமாக கொரோனா தொற்று பாதிப்பு படிப்படியாக குறைந்து வருகிறது. ஆனாலும் உருமாற்றம் அடைந்த கொரோனா வைரஸ் வேறு வகையில் பரவி வருகிறது. ஒருபக்கம் தடுப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டுவரும் வேளையில் மறுபுறம் அதற்கான தடுப்பூசி கண்டுபிடிக்கும் பணியில் உலக நாடுகள் வேகமாக முயன்று வருகின்றன.

இதில் இந்தியா குறிப்பிடத்தக்க வெற்றியை அடைந்துள்ளது. ஜனவரி முதல் நாடு முழுவதும் தடுப்பூசிகள் இலவசமாக மக்களுக்கு போடப்படும் என சமீபத்தில் முதல்வர் அறிவித்தார். தடுப்பூசி போடுவதற்காக தன்னார்வளர்களுக்கு பயிற்சியும் வழங்கப்படுகிறது.

முதற்கட்டமாக நாடுமுழுவதும் தடுப்பூசி ஒத்திகை முகாம்கள் நடக்கிறது. தமிழகத்தில் நாளை முதல் இந்த ஒத்திகை முகாம்கள் தொடங்குகிறது. தமிழகத்தில் 11 இடங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.

சென்னை ராஜிவ்காந்தி மருத்துவமனை, ஈக்காட்டுத்தாங்கல், சாந்தோம் சுகாதார நிலையங்கள், பூந்தமல்லி அரசு மருத்துவமனை, நேமம் சுகாதார நிலையம், நீலகிரி மாவட்டம் குன்னூர் அரசு மருத்துவமனை, உதகை மருத்துவக் கல்லூரி, நெல்லக்கோட்டை சுகாதார நிலையம், நெல்லை மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, ரெட்டியார்பட்டி, சமாதானபுரம் சுகாதார நிலையங்கள் ஆகிய 11 இடங்களில் நாளை ஒத்திகை நடைபெறுகிறது.

முதற்கட்டமாக 25 நபர்களை வைத்து நாளை காலை 9 மணிக்கு இந்த ஒத்திகை நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. இதற்காக, அரசு மருத்துவமனையில் இருக்கும் செவிலியர்கள் மருத்துவர்கள் தயார் நிலையில் இருக்க மருத்துவமனை நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்