கொரோனா கொடுந்தொற்றின் 2-ம் அலை நாட்டையே மிகப்பெரிய அதிர்ச்சிக்கும் அச்சத்துக்கும் ஆளாக்கி வருகிறது. கொரோனா தடுப்பூசி மருந்து வினியோகத்தில் மக்களிடையே குழப்பங்களை ஏற்படுத்தாமல் தெளிவான அறிவிப்புகளை மத்திய அரசு வெளியிட வேண்டும். தடுப்பூசி மருந்துகளை மத்திய அரசே கொள்முதல் செய்து மாநிலங்களின் தேவைக்கு ஏற்ப வழங்க வேண்டும். மாநில அரசுகளின் நிதி நிலைமை எப்போதும் பற்றாக்குறை உள்ள நிலையில் பிரதமர் நிவாரண நிதி, தேசிய பேரிடர் நிதி, ஏற்கனவே மத்திய பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்ட ரூ.35 ஆயிரம் கோடி நிதி ஆகியவற்றை செலவழித்து மக்களை கொடுந்தொற்றிலிருந்து காப்பாற்ற மத்திய அரசு உடனடியாக முன்வர வேண்டும்.அத்துடன், தனியார் தன் இஷ்டத்துக்கு விலை நிர்ணயிப்பதையும் தடுக்க வேண்டும். விலை நிர்ணயத்தை தனியார் அமைப்புகள் விருப்பம்போல் முடிவு செய்ய அனுமதிப்பது என்பது நியாயமல்ல.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.