தமிழக செய்திகள்

தமிழ்நாட்டில் அதிகரிக்கும் கொரோனா .... "இனி முக கவசம் கட்டாயம்" - ஐகோர்ட்டு அதிரடி உத்தரவு

சென்னை ஐகோர்ட்டு மற்றும் மதுரைக் கிளையில் வரும் திங்கட்கிழமை முதல் முக கவசம் கட்டாயம் அணிய வேண்டும் என ஐகோர்ட்டு பதிவாளர் அறிவித்துள்ளார்.

தினத்தந்தி

சென்னை,

இந்தியாவில் கொரோனா பாதிப்பு கடந்த 8 மாதங்களில் இல்லாத அளவில் நேற்று 10 ஆயிரத்தை தாண்டியது. இன்று காலை 8 மணி வரையிலான கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 11,109 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் 469, புதுச்சேரியில் 104 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், அதிகரிக்கும் கொரோனா பரவலை கருத்தில் கொண்டு, சென்னை ஐகோர்ட்டு இனி முக கவசம் கட்டாயம் என அதிரடியாக உத்தரவு பிறப்பித்துள்ளது.

கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில், சென்னை ஐகோர்ட்டு மற்றும் மதுரைக் கிளையில் வரும் திங்கட்கிழமை முதல் முக கவசம் கட்டாயம் அணிய வேண்டும் என ஐகோர்ட்டு பதிவாளர் அறிவித்துள்ளார்.

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை