சென்னை
மார்ச் 8 ஆம் தேதி தெடங்கிய சட்டப் பேரவை கூட்டம், ஏப்ரல் 9ஆம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் கெரேனா பாதிப்பு எதிரெலி காரணமாக சட்டப்பேரவை கூட்டம் வருகிற 31ஆம் தேதியுடன் கூட்டத் தெடர் நிறைவு செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான, அறிவிப்பை பேரவையில் சபாநாயகர் தனபால் வெளியிட்டார்.
மேலும், வருகிற 31ஆம் தேதி வரை காலை, மாலை என இரு வேளைகளில், சட்டப்பேரவை கூட்டம் நடைபெறும் என்றும், ஒரே நாட்களில் 6 துறைகளுக்கான மானிய கேரிக்கை விவாதம் நடைபெறும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.