தமிழக செய்திகள்

கொரோனா வைரஸ் பாதிப்பு; முதல் அமைச்சர் பழனிசாமி தலைமையில் ஆலோசனை கூட்டம் தொடங்கியது

கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றி முதல் அமைச்சர் பழனிசாமி தலைமையில் ஆலோசனை கூட்டம் தொடங்கியது.

தினத்தந்தி

சென்னை,

உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் இந்தியாவிலும் பாதிப்பு ஏற்படுத்தி உள்ளது. இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு 167 ஆக அதிகரித்து உள்ளது. இதேபோன்று பலி எண்ணிக்கை 4 ஆக உயர்ந்து உள்ளது. இதனை அடுத்து, பிரதமர் தலைமையில் நாளை முதல் அமைச்சர்கள் கூட்டம் நடைபெற உள்ளது.

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை 3 ஆக அதிகரித்து உள்ளது.

இந்நிலையில், தமிழக முதல் அமைச்சர் பழனிசாமி தலைமையில் தலைமை செயலகத்தில் இன்று ஆலோசனை கூட்டம் தொடங்கியது. இந்த கூட்டத்தில் துணை முதல் அமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் மற்றும் பிற அமைச்சர்கள், அதிகாரிகள் கலந்து கொண்டுள்ளனர். கூட்டத்தில் நோய் தடுப்பு நடவடிக்கைகள் பற்றியும், முன்எச்சரிக்கை நடவடிக்கைகள் பற்றியும் ஆலோசனை மேற்கொள்ளப்பட உள்ளது.

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்