சென்னை
மாநகராட்சி மேயர், நகராட்சி, பேருராட்சி தலைவர்களை கவுன்சிலர்களே தேர்வு செய்யும் இருந்த முறையை மாற்றி கவுன்சிலர்களே தேர்வு செய்யும் வகையில் கடந்த 2016-ல் சட்டம் இயற்றப்பட்டது.இந்நிலையில், இதனை மாற்றி, மாநகராட்சி மேயர்களை மக்களே தேர்வு செய்யும் மசோதாவை சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டது.
நகராட்சி மற்றும் பேரூராட்சி தலைவர்களையும் மக்களே தேர்வு செய்யவும் மசோதாவில் கூறப்பட்டுள்ளது. மசோதாவை உள்ளாட்சி துறை அமைச்சர் வேலுமணி தாக்கல் செய்தார். தனி அதிகாரிகளின் பதவிகாலம் நீட்டிப்பு முன்னதாக, உள்ளாட்சி அமைப்புகளின் தனி அதிகாரிகளின் பதவிக்காலத்தை நீட்டிக்கும் மசோதாவும் சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டது. இதற்கு திமுக எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
சட்டப்பேரவையில் இருந்து ஆர்.கே.நகர் தொகுதி எம்எல்ஏ தினகரன் வெளிநடப்பு செய்துள்ளார். கவர்னர் உரை மீதான நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீது பேச அனுமதி அவருக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது .