தமிழக செய்திகள்

சென்னை மாநகராட்சியில் எம்-சாண்ட் பயன்படுத்தியதன் மூலம் ஊழல் - திமுக தலைவர் ஸ்டாலின்

சென்னை மாநகராட்சியில் ஆற்றுமணலுக்கு பதில் எம்-சாண்ட் பயன்படுத்தியதன் மூலம் ஆயிரம் கோடி ரூபாய் ஊழல் நடைபெற்றிருப்பதாக திமுக தலைவர் ஸ்டாலின் கூறியுள்ளார்.

தினத்தந்தி

சென்னை,

சென்னை மாநகராட்சியில் ஆற்றுமணலுக்கு பதில் எம்-சாண்ட்(M-sand) பயன்படுத்தியதன் மூலம் ஆயிரம் கோடி ரூபாய் ஊழல் நடைபெற்றிருப்பது குறித்து உரிய விசாரணை நடத்த வேண்டும் என்று திமுக தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், சென்னை மாநகராட்சியில், ஆற்றுமணலுக்குப் பதில் எம்-சாண்ட் பயன்படுத்தியதில் ஆயிரம் கோடி ரூபாய் அளவிற்கு ஊழல் என்று வரும் செய்திகள் அதிர்ச்சியளிப்பதாக தெரிவித்துள்ளார்.

சென்னை மாநகராட்சியால் விடப்படும் ஒப்பந்தங்களில் ஆற்றுமணல் பயன்படுத்தப்படுவதாக மதிப்பீடு கொடுக்கப்பட்டுள்ள நிலையில், அதற்கு பதில் எம்-சாண்ட் பயன்படுத்தப்படுவதாக ஆய்வில் தெரியவந்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

ஆற்றுமணலை விட எம்-சாண்ட் விலை குறைவு என்ற நிலையில், ஒப்பந்தங்களில் கான்கிரீட் கட்டுமானங்களில் பயன்படுத்தப்படும் ரெடிமிக்ஸ் எம்-30 வகை மணலின் சந்தை விலை 30 சதவீதம் அதிகமாக கொடுக்கப்பட்டுள்ளது என்றும் ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார்.

சென்னை மாநகராட்சியில் நடைபெற்றுள்ள ஊழலை, ஊழல் தடுப்புத்துறை தாமதமின்றி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து