தமிழக செய்திகள்

அரூர் கூட்டுறவு சங்கத்தில்ரூ.76 லட்சத்திற்கு பருத்தி ஏலம்

அரூர்

அரூர் கூட்டுறவு வேளாண்மை உற்பத்தியாளர்கள் சங்கத்தில் நேற்று பருத்தி ஏலம் நடைபெற்றது. அரூர், கம்பைநல்லூர், கோட்டப்பட்டி உள்பட பல்வேறு பகுதிகளில் இருந்து விவசாயிகள் 3,200 மூட்டை பருத்தியை ஏலத்திற்கு கொண்டு வந்தனர். இதில் எம்.சி. 5 ரக பருத்தி குவிண்டால் ரூ.5,989 முதல் ரூ.6,519 வரை ஏலம் போனது. நேற்று நடந்த ஏலத்தில் ரூ.76 லட்சம் பருத்தி ஏலம் போனதாக செயலாளர் அறிவழகன் தெரிவித்தனர்.