தமிழக செய்திகள்

ரூ.26 லட்சத்துக்கு பருத்தி ஏலம்

நாமக்கல்லில் 1,200 மூட்டை பருத்தி ரூ.26 லட்சத்துக்கு ஏலம் போனது.

தினத்தந்தி

பருத்தி ஏலம்

நாமக்கல் வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்க வளாகத்தில் செவ்வாய்க்கிழமை தோறும் பருத்தி ஏலம் நடைபெறுவது வழக்கம். வழக்கம்போல் பருத்தி ஏலம் நடைபெற்றது.

இந்த ஏலத்துக்கு நாமக்கல், நாமகிரிப்பேட்டை, ராசிபுரம், வேலகவுண்டம்பட்டி, புதுச்சத்திரம், எருமப்பட்டி, பவித்திரம், சேந்தமங்கலம் என மாவட்டம் முழுவதும் இருந்தும், அண்டை மாவட்டங்களில் இருந்தும் விவசாயிகள் 1,200 மூட்டை பருத்தியை விற்பனைக்கு கொண்டு வந்து இருந்தனர்.

ரூ.26 லட்சத்துக்கு விற்பனை

ஆர்.சி.எச். ரக பருத்தி குவிண்டால் ஒன்றுக்கு ரூ.6 ஆயிரத்து 200 முதல் ரூ.7 ஆயிரத்து 400 வரையிலும், கொட்டு ரக பருத்தி குவிண்டால் ஒன்றுக்கு ரூ.4 ஆயிரத்து 729 முதல் ரூ.5 ஆயிரத்து 19 வரையிலும் ஏலம் போனது. இந்த பருத்தி மூட்டைகள் ரூ.26 லட்சத்துக்கு விற்பனையானது.

இந்த பருத்தி மூட்டைகளை திருப்பூர், திண்டுக்கல், தேனி, சேலம், கொங்கணாபுரம், கோவை, அவினாசி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வந்த வியாபாரிகள் ஏலம் எடுத்து சென்றனர். நேற்று ஏலத்திற்கு டி.சி.எச். ரக பருத்தி வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை